Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Pongal Vizha 2025-2026

Pongal Vizha 2025 - 2026

செல்லம்மாள் மகளிர் கல்லூரி
பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம்,
கிண்டி, சென்னை-32.
பொங்கல் விழா 2025-2026

பொங்கல் விழா 13.01.2026 அன்று தனிச்சிறப்போடு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் வே. மலர்விழி அவர்கள் தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார்.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர்
முனைவர் வீ. மகாலட்சுமி நட்சத்திரம் அவர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் வீ. கவிதா அவர்களும் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மோ. ரூபா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் செ. கனிமொழி அவர்கள் தைப்பொங்கலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை வழங்கினார்.
நிமிர் கலையகத்தின் தொடர் பயிற்சியால் மாணவிகள் நிகழ்த்திய பறையிசை நிகழ்ச்சி எல்லோரும் கொண்டாடும் வகையில் அமைந்தது. மாணவிகள் நம் மண் சார்ந்த பாரம்மரிய கலை நிகழ்ச்சிகளான கும்மி, கரகாட்டம், கோலாட்டம், களியலாட்டம், சிலம்பாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை சிறப்பாக நிகழ்த்தி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
பண்பாடு, கலை, பாரம்பரியத்தை போற்றி, மீட்டெடுத்து வளர்க்கும் வகையில் பொங்கல் விழா-2026 சிறப்பாக நடைபெற்றது.

 

ஒருங்கிணைப்பாளர்                                                                முதல்வர் 

                                                                                                                                                           

 

முதல்வருக்குப் பூங்கொத்து வழங்குதல்

கண்டு மகிழ்ந்த பேராசிரியர்கள்