செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா 21.04.2022 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் பி. மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு “தமிழோடு உறவாடு” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் 18.04.2022 அன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி கவிதைப்போட்டி,வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.