சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் 11/1/2024 அன்று பாரம்பரிய பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.மாவிலையில் தோரணம் கட்டி ,வண்ண வண்ண கோலமிட்டு,மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. விழாவில் மாணவியரின் கிராமிய நடனம்,பறையாட்டம்,சிலம்பம் ஆகிய நிகழ்ச்சிகள் கண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர்.வே.மலர்விழி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.ஆட்சிக் குழு உறுப்பினரும் வணிகவியல் துறைத் தலைவருமான முனைவர்.வீ. மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.மாணவியர்கள் உற்சாகமாக இவ்விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.