செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா 15.03.2024 அன்று செல்லம்மாள் கலையரங்கில் நடைபெற்றது. இயற்றமிழுக்கு சிறப்பு விருந்தினராக பேச்சாளர் இணைப்பேராசிரியர் மொழியரசி முனைவர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இசைத்தமிழுக்கு தமிழிசைச் சுடர் சிந்துஜா பாலசுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு “இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை” பாடல்களைப் பாடினார்கள். நாடகத் தமிழுக்கு பிரசன்னா ராம்குமார் அவர்களின் தியேட்டர் கோ கலைக்குழு வழங்கிய “நம் அருமை புதுமைப்பித்தன்” எனும் நாடகம் நடித்துக்காட்டப்பட்டது. இந்நிகழ்வில் 31.01.2024 அன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.