Pongal Vizha 2024-2025
செல்லம்மாள் மகளிர் கல்லூரி
பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம்
கிண்டி , சென்னை – 32
சமத்துவப் பொங்கல் விழா -2025
சமத்துவப் பொங்கல் விழா 10.01.2025 அன்று கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் முனைவர் வே. மலர்விழி அவர்கள் தலைமையுரை வழங்கினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வீ. மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் வீ. கவிதா அவர்கள் முன்னிலை வகித்தார். முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் ப. விமலா அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மாற்று ஊடக மையத்தின் இயக்குநர் முனைவர் இரா. காளீஸ்வரன் அவர்களை அறிமுகப் படுத்தினார். தமிழர் களைகளைப் பற்றி அவர் ஆற்றிய உரை மாணவிகள் மனதில் கலை சார் அறிவையும் முனைப்பையும் மேம்படுத்தியது. நிமிர்வு குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி அனைவரும் கொண்டாடும் வண்ணம் அமைந்தது. பாரம்பரிய விளையாட்டுகளையும் உணவுப் பொருட்களையும் மாணவிகள் காட்சிப்படுத்தினர். மாணவிகள் சிலம்பம், ஒயில், கும்மி, கோலாட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்சிகளை வழங்கினர்.
தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கலைகளையும் போற்றும் வகையில் சமத்துவப் பொங்கல் விழா – 2025 சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் முதல்வர்
அழைப்பிதழ்




















