Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Muthamizh Vizhaa 2024-2025

Muthamizh Vizhaa 2024-2025

செல்லம்மாள் மகளிர் கல்லூரி (2024 -2025)
முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை
முத்தமிழ் விழா (20.02.2025)

செல்லம்மாள் மகளிர் கல்லூரி, முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறையின் சார்பாக, 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான நிகழ்வாக, முத்தமிழ் விழா 20.02.2025 அன்று செல்லம்மாள் மகளிர் கல்லூரி கலையரங்கில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக கல்லூரியின் தமிழ்த் துறை பாடல் குழு மாணவியர்களால் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து செல்லம்மாள் துதியும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றுதல். குத்து விளக்கை, கல்லூரி முதல்வர் முனைவர் (திருமதி) வே.மலர்விழி, சிறப்பு விருந்தினர் கலைமாமணி, வாகீச கலாநிதி திருமதி தேசமங்கையர்க்கரசி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்(திருமதி) ப.விமலா அவர்கள் மங்கள இசையுடன் ஏற்றினார்கள்.
தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்(திருமதி) ப.விமலா அவர்கள் விழாவிற்கு வந்தவர்களை எல்லாம் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் (திருமதி) வே.மலர்விழி அவர்கள் அழகானதொரு வாழ்த்துரை வழங்கினார். அவர்களைத் தொடர்ந்து இயற்றமிழுக்கும், இசைத்தமிழுக்கும் வந்த சிறப்பு விருந்தினர்களை கல்லூரி முதல்வர் முனைவர் (திருமதி) வே.மலர்விழி அவர்கள் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தார்கள்.
இயற்றமிழுக்கு கலைமாமணி, வாகீச கலாநிதி திருமதி தேசமங்கையர்க்கரசி அவர்கள் முந்துதமிழ் எனும் தலைப்பில் தமிழ் மொழியின் உயர்வினையும் தமிழ்மொழியில் சிறந்த ஆளுமைகளையும், எடுத்துக் கூறி, தமிழால் தான் அடைந்த மேன்மைகளையும் அனுபவங்களையும் குறித்து சிறப்பான உரையாற்றினார்கள். அவரது உரை, கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
இசைத்தமிழுக்கு கிராமிய இசை எனும் தலைப்பில், கலைமாமணி, கிராமிய இசை கலாநிதி, முனைவர் திரு.வேல்முருகன் அவர்கள் தான் பாடிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் காட்டினார். திரைப்படங்களில்

 

தான் பாடிய புகழ்பெற்ற சிறந்த தமிழ்ப் பாடல்களை மாணவியர் விருப்பத்திற்கிணங்க பாடிக் காட்டினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்காட்டி அரங்கத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
நாடகத் தமிழுக்கு திரு.பிரளயன் அவர்கள் நடத்தும், சென்னைக் கலைக்குழு பட்டாங்கில் உள்ளபடி எனும் தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. இந்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்தும், உண்மைச் சம்பவத்தை நாடகக் கதையாக்கியும், பத்தொன்பது கதாபாத்திரங்களை கொண்டு நடித்துக் காட்டப்பட்டது. நாடகம் என்பது இன்றைய நிலையில் எவ்வாறு வளர்ச்சியடைந்து எவ்வாறு நடித்துக் காட்டப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு கற்பிக்கும் விதமாக இந்நிகழ்வு இருந்தது.
நாடகத்தின் முடிவில் நாடகக் கலைஞர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. நிறைவாக நன்றியுரை. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் (திருமதி) செ.கனிமொழி அவர்கள் நன்றியுரையைக் கூற விழா இனிதாக நிறைவுற்றது. முத்தமிழைச் சிறப்பிக்க எடுக்கப்பட்ட இவ்விழாவில் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான மாணவிகள் பங்குகொண்டு பயன்பெற்றனர்.

துறைத்தலைவர்                                                                                                      முதல்வர்

குத்து விளக்கு ஏற்றுதல்

இசை