Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Tamil Department Activities

Tamil Department Activities

Work Shop

A two-day workshop jointly organized by the Tamil Department of Chellammal Women’s College and SRM Institute of Science & Technology was held on October 13 & 14. On 13.10.2022, the principal of the college attended and inaugurated the workshop by delivering a keynote speech. Associate Professor, SRM Institute of Science & Technology L. Sundaram trained the students effectively on various topics like use of Tamil in electronics, Tamil software classification and development, use of Tamil on the Internet, online learning and teaching of Tamil, use of computers for daily life and research. Prof. Kavita Nair, Head of Department of English and Foreign Languages, Institute of Science & Technology, attended and delivered the keynote address. At the end of the workshop, certificates were awarded to the students who participated in the training.

One Day Seminar

பன்னாட்டு கருத்தரங்கம் 2024 

சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக மலேசிய சிறார் இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 12.01.24 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. மலேசியா சிறார் இலக்கிய எழுத்தாளர் பாலமுருகன் கேசவன் கலந்து கொண்டு சிறார் இலக்கியத்தின் சிறப்புகள், உத்திகள் மற்றும் சிறார் இலக்கியம் படைக்க வேண்டிய அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். முதல்வர் முனைவர் வே.மலர்விழி அவர்கள் வாழ்த்துரையும், தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப.விமலா வரவேற்பரையாற்ற விழாவினை தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் மா.ரமாதேவி முனைவர் இரா.விமலாதேவி இருவரும் ஒருங்கிணைத்தனர். இக்கருத்தரங்கில் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்த்துறை மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

பன்னாட்டு கருத்தரங்கம் 2023-24 

முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத் துறை சார்பாக 28/07/2023 அன்று ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இனிதே நடைப் பெற்றது. செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் மாணவி முனைவர். சந்திரிகா சுப்பிரமண்யன், (பாரிஸ்டர் ஆஸ்திரேலியா) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர். மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்.ப.விமலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.முன்னதாக முனைவர்.சா.வனிதா,(உதவிப்பேராசிரியர்)) அவர்கள் வரவேற்புரை நல்கினார்.முனைவர்.மோ.ரூபா,(உதவிப்பேராசிரியர்) அவர்கள் நிகழ்வின் இறுதியில் நன்றிரை வழங்கினார். இக்கருத்தரங்கில் முனைவர்.சந்திரிகா சுப்பிரண்யன் அவர்களுக்கு அவர்தம் கல்விசார் சமுதாயப் பணியை பாராட்டி மனிதநேயப் பண்பாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. முனைவர் பட்ட மாணவி செல்வி.வேளாண்கன்னி அமிர்தா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரையாற்றினார். முனைவர் பட்ட மாணவி செல்வி. இந்துமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

National seminar was held on 19 January 2023. Dr.Vani arivalan, Assistant Professor of Tamil, University of Madras, was given speech about Pazhantamizhlar Kaadum kaadu Saarntha Vazhvum.

Chellammal Women’s College Alumni Dr. Chandrika subramaniyan ( Barrister Australia) Endowment Seminar was held on 26 February 2023.Dr.Balaraman,(Assistant Professorof Tamil, Govt Arts College ,Chennai )was given speech about “Tamizhar Vaalviyal”.

You tube link:

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 07.01.2022 அன்று ஒருநாள் இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். திரு சக்தி இராவணன் அவர்கள் பங்கேற்று “பழந்தமிழரின் இசைக்கருவிகள்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்.

 

International Conference

 You Tube Link:

https://youtu.be/-W0tOtmUDls
https://youtu.be/Yg8uMXvWh3U
https://youtu.be/QlUQyYhQc54

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 09.06.2021 மற்றும் 10.06.2021 ஆகிய இரு நாட்கள்  இணைய வழிக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் விழாவில் முனைவர் செல்லத்துரை சுதர்சன், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், முனைவர் திருமதி.உமாதேவி பேராசிரியர், தில்லி பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆறு அமர்வுகளில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரைகளை வாசித்தார்கள். நிறைவு விழாவில் முனைவர் பா. இரவிக்குமார் உதவிப்பேராசிரியர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் அவர்கள் பங்கு கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். முனைவர் சுரேஷ் ரத்தினசாமி சர்வதேசதமிழ் ஆய்விதழ், முதன்மை ஆசிரியர் அவர்கள் ஆய்வுரை வழங்க விழா  சிறப்பாக நிறைவுற்றது.

Endowment Lecture Inaugration

Chellammal Women’s College Alumni Dr.Chandrika subramaniyan( Barrister Australia) Endowment Seminar was held on 26 February 2023.Dr.Balaraman,(Assistant Professorof Tamil, Govt Arts College ,Chennai )was given speech about “Tamizhlar Vaalviyal’.

செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறையின் முன்னாள் மாணவி சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் ரூபாய் ஒரு லட்சம் தமிழ்த்துறைக்கு நன்கொடையாக வழங்கி அறக்கட்டளை நிறுவினார். அவ்வறக்கட்டளையின் தொடக்க விழா  07.03.2022 அன்று  இணைய வழியில் நடைபெற்றது. நிகழ்வில் அம்மா அவர்கள் அவருடைய கல்லூரி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, ஊக்க உரையும் ஆற்றிவிழாவினைச் சிறப்பித்தார்கள்.

Muthamizh Vizha

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முத்தமிழ் விழா 21.04.2022 அன்று நடைபெற்றதுசிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டுதமிழோடு உறவாடுஎனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  இந்நிகழ்வில் 18.04.2022 அன்று தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது.

Association Activities: Inauguration

You tube link:

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை சார்பாக 09.09.2021 அன்று தமிழ் இலக்கிய மன்றத் தொடக்கவிழா இணைய வழியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முனைவர். திருமதி ந.விஜயசுந்தரி அவர்கள் பங்கேற்று “இலக்கிய எரிபொருள்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றி நிகழ்வினைச் சிறப்பித்தார்கள்

Inter Collegiate Competitions

செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழியல் உயராய்வுத்துறை தமிழ் மன்றம் அனைத்து கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டினை முன்னிட்டு திராவிடம் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் 31.01.2024 அன்று நிகழ்த்தியது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவிஞர் எழுத்தாளர் ஆதிரா முல்லை கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வே. மலர்விழி வாழ்த்துரை வழங்கினார. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. விமலா வரவேற்புரை நல்கினார். ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர்.தா அ சிரிஷா ,முனைவர் இரா. விமலா தேவி ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். தமிழ் துறை மாணவிகள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்வில் பேச்சு, கட்டுரை ,வினாடி வினா, கவிதை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து கல்லூரிகளில் இருந்தும் பெருந்திரளான மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

*Tamil Literary Forum 2023*

   *Vallalar 200*

Every year the Tamil Literary forum of the Department of Tamil  organizes an annual  inter-college competition.  This year Tamil Literary forum organized  competitions in collaboration with Ramyam Education Foundation and charitable organization on 17.02.23 to mark the 200th anniversary of Vallalar. Competitions like essay, speech, and quiz related to Vallalar were conducted. The event was presided over by Mrs.Ramya Ashok, founder of Ramyam Education trust and  charity.

செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதுகலைத் தமிழியல் மற்றும் உயராய்வுத்துறை, தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகமகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாஅதனை முன்னிட்டு 18.04.2022 அன்று பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்துக் கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முத்தமிழ் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.