Shift I +91 - 44 - 22351217 | Shift II +91 - 44 - 22351221
Accredited by NAAC with "B" Grade (Affiliated to University of Madras)

Rotaract

ROTARACT CLUB OF CHELLAMMAL WOMEN’S COLLEGE

செல்லம்மாள் மகளிர் கல்லூரி ரோட்டரி சங்கமும், ROTARACT CLUB OF CHENNAI EAST RAPURAM இணைந்து  இலவச மருத்துவ முகாமினை 09.02.2024 அன்று நடத்தியது. இந்த மருத்துவ முகாமில் ராமச்சந்திரா மருத்துவமனையின் மூலம்  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயை பரிசோதனை (MAMMOGRAM TEST) செய்யப்பட்டது.  VHS மருத்துவமனை மூலம் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.  நந்தலாலா பவுண்டேஷனின் மூலம்  உடல்நல பரிசோதனை (GENERAL TEST) எடுக்கப்பட்டது. இம்முகாமில் கல்லூரி மாணவிகளும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை (MAMMOGRAM TEST) செய்யப்பட்டது. 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனையும் 200க்கும் மேற்பட்டோருக்கு பல் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் குறித்த ஆலோசனையும் பரிசோதனையும் செய்யப்பட்டது.

மருத்துவ முகாமினை செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வெ.மலர்விழி அவர்கள் தொடங்கி வைக்க கிழக்கு அண்ணாமலைபுரம் ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திருமதி கல்பனா யுவராஜ் (president), டாக்டர் சீனிவாசன் (secretary),திரு E H ராவ்(ERA co ordinater) மற்றும் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ப.விமலா, முனைவர் டி.இராஜகுமாரி,முனைவர் கு.சித்ரா தேவி, முனைவர் சே.ஜெயலட்சுமி, முனைவர் மு. ஆ. ப. சரஸ்வதி,முனைவர் கி.புவனேஸ்வரி, முனைவர் ஆ. சுபாஷினி, முனைவர் கோ.விமலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

 

சுழற்சங்க அமைப்பு – 2023

17/8/2023 வியாழக்கிழமை அன்று எமது கல்லூரியின் சுழற்சங்க அமைப்பினுடைய  பேரவை துவக்கமும், புத்தக வங்கிகளுக்காக புத்தகம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வின் அழைப்பாளராக தமித்துறைத்தலைவர் முனைவர்.ப.விமலா அவர்கள் இருந்து வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர். வீ.மகாலட்சுமி நட்சத்திரம் அவர்கள் தலைமையுரையாற்றினார். முனைவர்.K.சித்ராதேவி (உதவிப் பேராசிரியர், பொருளாதாரத் துறை), முனைவர். D.ராஜகுமாரி (உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை), முனைவர்.S.ஜெயலட்சுமி (உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை), முனைவர். M.A.B.சரஸ்வதி (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை), முனைவர்.கி.புவனேஸ்வரி (உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை),  முனைவர். அ.சுபாஷினி (உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை), முனைவர்.G.விமலா (உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை), முனைவர். R. சண்முகபிரியா (உதவிப் பேராசிரியர், பொருளாதாரத் துறை) போன்றோர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  தேவேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். மாணவியர்க்கு ஊக்கம் தரும் வகையில் பல நல்ல அறிவுரைகளை வழங்கினார். மேலும் சுழற்சங்க அமைப்பினுடைய தலைமையாளர், செயலாளர் முதலியோர் கலந்துக் கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர். சுழற்சங்க அமைப்பின் தலைமையாளர் கல்பனா யுவராஜ் அவர்கள் நேரத்தின் அருமையையும் அதை பயன்படுத்தும் முறையையும் குறித்து சிறப்புரையாற்றினார். எமது கல்லூரியின் ஓய்வுப்பெற்ற இணைப்பேராசிரியர் முனைவர் சித்ரா அவர்கள் கல்லூரி மாணவியரின் உணவுக்காக பத்தாயிரம் உதவித்தொகை வழங்கினார். எமது கல்லூரி மாணவியரின் சார்பாக  சுழற்சங்க அமைப்பினுடைய தலைமையாக முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி சோபியா ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுழற்சங்க அமைப்பில் தம்மை இணைத்துக் கொண்டதற்கு சான்றாதாரமாக அமைப்பின் முக்கிய நோக்கங்களான சுற்றுச்சூழலைப் பேணி காத்தல், ஏழை எளியோர்க்கு உதவுதல்,   மாணவியர்க்கு கல்விக்கட்டணம் கட்டுதல் போன்ற உறுதிமொழிகளை ஏற்றனர். எமது கல்லூரியில் உள்ள ஒவ்வொரு துறைக்கும்  சுழற்சங்க அமைப்பின் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

PARENT CLUB – ROTARY CLUB OF CHENNAI EAST R.A. PURAM

ACADEMIC YEAR 2022-23

The installation programme of Rotaract Club of Chellammal Women’s College was conducted on 14th August, 2022 followed by Book Bank Ceremony and Self-Defence Programme for our students, which was well received by all attendees.
The Book Bank in college lends textbooks to needy and downtrodden students that they may require for all three years of their academic pursuits.
Total Rotaract Stock of Books during 2021-22 available for Book Bank Project
Sl.No
Department
Number of Books
1 Economics 516
2 English 69
3 Tamil 10
4 Commerce 128
5 Chemistry 70
6 History 68
7 Zoology 204
Total Books 1065
Department of Economics – Book Bank Project Details for the year 2021-22
Sl.No
Year
Number of Students Benefited by this Project
Total Number of Books distributed for the Students
1 I 68 111
2 II 27 27
3 III 52 137
Total 147 275
  • Rotaract of CWC and the Placement jointly organized a Career Guidance programme on “What is Staff Selection Commission, its functions and Importance” on 7th February at 9.15 am for all the Shift I students and at 2.00pm for the Shift II Students. From SSC Max, Ms. Dhana B Natchya, Chief Coordinator and Mr. Kalaiselvan, DAO Indian Audit and Accounts Department Chief Mentor addressed the Students.
  • Rotaract of CWC and the Placement jointly coordinated Cultural Programmes and displayed 108+ projects of the students at the Education stall of 46th All India Tourism and Trade Fair of Tamilnadu, Chennai, Island Grounds on 8th, 9th and 10th of February, 2023.

Day College

Evening College